விபத்தில் சிக்கிய இந்திய கிரிக்கெட் வீரர் தொடர்பில் அதிர்ச்சி தகவலை தெரிவித்த மருத்துவமனை !

இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் கடந்த டிசம்பர் 30ஆம் தேதி டெல்லியில் இருந்து ரூர்க்கிக்கு சென்று கொண்டிருந்த கார் விபத்தில் பலத்த காயமடைந்தார்.

டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு மேல் சிகிச்சைக்காக மும்பைக்கு விமானத்தில் செல்ல இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) முடிவு செய்தது.

அதன்படி, மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

காலில் ஏற்பட்ட தசை நார் காயத்திற்கு சத்திரசிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரிஷப் பாண்டுவின் முழங்கால் அறுவை சிகிச்சை நேற்று வெற்றிகரமாக முடிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மருத்துவ குழுவினரின் கண்காணிப்பில் அவர் வேகமாக குணமடைந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleநாடு முழுவதும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு 45,000 ரூபா போஷாக்கு உணவுக் கொடுப்பனவு!
Next articleவெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சட்டவிரோத குடியேற்றம் தொடர்பாக இருவர் கைது!