வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சட்டவிரோத குடியேற்றம் தொடர்பாக இருவர் கைது!

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சட்டவிரோத குடியேற்றம் தொடர்பாக போலி உத்தரவாதங்களை வழங்கி பலரிடம் பணம் பெற்ற சந்தேக நபர்கள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடற்படை புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் சிறிலங்கா கடற்படையினரால் சிறிலங்கா பொலிஸாருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் சந்தேக நபர்கள் ஜனவரி 04ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.

நீர்கொழும்பில் 30 மற்றும் 41 வயதுடைய இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் சிலபம் மற்றும் கிளிநொச்சி ஆகிய பகுதிகளை வசிப்பவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவர்கள் 20 பேரிடம் இருந்து சுமார் 05 மில்லியன் ரூபாவை பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, இவ்வாறான மோசடிகள் தொடர்பில் மக்கள் விழிப்புடன் இருக்குமாறும், சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறும் கடற்படையினர் வேண்டுகோள் விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Previous articleவிபத்தில் சிக்கிய இந்திய கிரிக்கெட் வீரர் தொடர்பில் அதிர்ச்சி தகவலை தெரிவித்த மருத்துவமனை !
Next articleபரிதாபமாக உயிரிழந்த இளம் யுவதி ! காரணத்தால் அதிர்ந்த குடும்பத்தினர் !