பரிதாபமாக உயிரிழந்த இளம் யுவதி ! காரணத்தால் அதிர்ந்த குடும்பத்தினர் !

இந்தியாவின் கேரள மாநிலத்தில் மந்தி புரியாணி சாப்பிட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த இளம்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

20 வயதான அஞ்சு ஸ்ரீபார்வதி இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் பெரும்பாலா பகுதியில் வசிக்கும் இந்த இளம்பெண், கடந்த 31ம் தேதி உள்ளூர் உணவகம் ஒன்றில் குஷிமந்தி புரியாணியை வாங்கியுள்ளார்.

உணவை சாப்பிட்டுவிட்டு, யுவதி கார்க்கோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆபத்தான நிலையில் இருந்த யுவதி, கர்நாடக மாநிலம் மங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்துமாறு கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்

மறுபுறம், இதற்கு முன்பு கேரள மாநிலத்தில் கோழிக்கோட்டில் உள்ள உணவகத்தில் மந்தி புரியாணி சாப்பிட்டு செவிலியர் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.

இதில் கோட்டயம் மருத்துவக் கல்லூரியில் பணியாற்றி வந்த செவிலியர் உயிரிழந்தார். கேரளாவில் ஒரே வாரத்தில் புரியாணி சாப்பிட்ட 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

Previous articleவெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சட்டவிரோத குடியேற்றம் தொடர்பாக இருவர் கைது!
Next articleதண்டவாளத்தில் கழுத்தை வைத்து தற்கொலை செய்து கொண்ட இளைஞன் ! தீவிர விசாரணையில் பொலிஸார் !