கோழிப் பண்ணை ஒன்றில் வளர்ந்து வந்த 240 திருடப்பட்டுள்ளன.

கோழிப் பண்ணை ஒன்றில் வளர்ந்து நல்ல நிலையில் இருந்த 240 கோழிகள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் கம்பளை பொல்வத்த பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது

மேலும் கோழிப் பண்ணை இரும்பு கூண்டுகளினால் அடைக்கப்பட்ட நிலையில் இரும்பு கூண்டுகளின் வலையினை அறுத்து கோழிகளை திருடிச் சென்றதாக பொலிசில் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.

திருடப்பட முன்னர் கோழிப்பண்ணையில்  2,000 கோழிகள் இருந்ததாக கோழிப்பண்ணை உரிமையாளர் பொலிசில் முறைப்பாடு செய்துள்ளார்.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் யாரும் கைது செய்யப்படவில்லை .