75ஆவது சுதந்திர தினம் : செலவுகளை நிர்வகிப்பதற்கான உத்தரவுகளை ஜனாதிபதி பிறப்பிப்பு

சுதந்திர தின விழா பிரமாண்டமானா, பெருமையான நிகழ்வு, ஆனால் குறைந்த செலவை பேணுவது தொடர்பான முன் கலந்துரையாடல் நேற்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

அதன்படி, 75ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, பெப்ரவரி 2ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை பல சிறப்பு திட்டங்கள் செயற்படுத்தப்பட உள்ளன.

விசேட தலதா பூஜை மற்றும் பீரித் ஓதுதல், அனைத்து மத சடங்குகள், சுதந்திர சதுக்கத்தில் நடைபெறும் கலாசார நிகழ்ச்சிகள், காலி முகத்திடலில் நடைபெறும் பாரம்பரிய சுதந்திர விழா பிரதான நிகழ்வு, தேசிய பூங்காக்கள் மற்றும் மிருகக்காட்சிசாலை ஆகியவை பொதுமக்களுக்கு இலவசமாக திறக்கப்படும். யாழ்ப்பாணம் கலாசார நிலைய திறப்பு விழா, கண்டி குடியரசு அணிவகுப்பு, தொன்றா முனையிலிருந்து பருத்தித்துறை வரையிலான சைக்கிள் ஓட்டப் போட்டி போன்றவையும் திட்டமிடப்பட்டுள்ளது.

நாட்டின் தற்போதைய நிதி நிலைமை தொடர்பில் அவதானம் செலுத்தும் அதேவேளை இந்த செயற்பாடுகளுக்கு தேவையான செலவினங்களை மதிப்பீடு செய்து நடைமுறையான முறையில் செலவு செய்து செலவுகளை குறைப்பது அரசியல் அதிகார சபையினது பொறுப்பாகும் என ஜனாதிபதி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

75 ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் மக்கள் மத்தியில் பாரிய எதிர்ப்பு காணப்படுவதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதற்கான செலவினங்களை குறைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

“நாம் 75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாட வேண்டும், இல்லையெனில், நமது சுதந்திரத்தை கூட நாம் கொண்டாட முடியாது என உலகம் சொல்லும். அதேபோல் சுற்றுலாப் பயணிகளையும் முதலீட்டாளர்களையும் நம் நாட்டிற்கு ஈர்க்க வேண்டும். நம் நாட்டைப் பற்றிய நேர்மறையான பிம்பத்தை உருவாக்க வேண்டும். எனவே, நமது செலவினங்களைக் குறைத்து, நமது சுதந்திர தினத்தைக் கொண்டாடுவோம் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

சுதந்திர தின விழாவுடன் இணைந்து நகர்ப்புற காடுகளை உருவாக்கும் திட்டம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. டுபாயில் நடைபெறும் காலநிலை உச்சி மாநாட்டில் (COP28) கலந்து கொள்வதற்கு முன்னதாகவே நடவடிக்கைகளைத் தொடங்க எதிர்பார்க்கிறோம். மேலும், பல புதிய நிறுவனங்களைத் தொடங்கவும் எதிர்பார்க்கிறோம் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் தினேஷ் குணவர்தன, இராணுவ பிரதம அதிகாரி மற்றும் ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர்கள். , பாதுகாப்பு, வெளிவிவகார, கல்வி, கலாசார மற்றும் பௌத்த விவகாரங்கள், ஊடகம், நிதி மற்றும் திறைசேரி மற்றும் வரி அமைச்சுக்களின் அதிகாரிகள் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

Previous articleதுப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஒருவர் பலி
Next articleமீண்டும் பொது வெளியில் கோட்டா!