பிரித்தானியாவில் நோரோ வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரிப்பு!

பிரித்தானியாவில் நோரோ வைரஸ் தொற்றின் பரவல் தீவிரமடைந்து வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.இந்த வைரஸ் தொற்றால் ஏற்ப்படும் பாதிப்பின் காரணமாக நாளொன்றுக்கு  371 பேர் வரையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர் .

நோரோ வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதால் விரைவில் மருத்துவமனைகள் நிரம்பி விடும் என பிரித்தானிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அத்துடன் கடந்த வாரத்தை விட இவ் வாரத்தில் தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.மேலும் இந்த நோரோ வைரஸ் தாக்குதலுக்கு இலக்காகி உள்ள குழந்தைகள் மற்றும் முதியவர்கள் ஆபத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleயாழில் பிறந்து முப்பது நாட்களேயான ஆண் குழந்தை உயிரிழப்பு!
Next articleசுதந்திர தினத்தன்று கோழி பேரணி!