தேர்தல் சட்டமீறல் தொடர்பில் ஆளூம் கட்சிக்கு எதிராக அதிக வழக்குகள் பதிவாகியுள்ளன.

நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தல் பிரசாரக் காலத்தில் இதுவரை ஆளும் கட்சி சார்பாகவே அதிக சட்ட மீறல் வழக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் தேர்தல் பிரசாரக் காலத்தில் ஆளும் கட்சியான பொதுஜன பெரமுனவினால் அரச சொத்துக்கள் தவறாக பயன்படுத்தப்படுவதுதொடர்பில் அதிகமான குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என தேர்தல் வன்முறை கண்காணிப்பு நிலையம் தெரிவித்துள்ளது.

அதே சமயம் இதேவேளை தேர்தல் சட்ட மீறல்கள் மற்றும் தேர்தல் வன்முறைகள் தொடர்பாக இதுவரை 15 வழக்குகளை தமது அமைப்பு பதிவு செய்துள்ளதாகவும் அவற்றில் பெரும்பாலானவை பொதுச் சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பான வழக்குகள் என பெப்ரல் அமைப்பு அறிவித்துள்ளது.

Previous articleவரலாற்றில் முதல் முறையாக புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவன்
Next articleஜெர்மனி மக்களுக்கான மகிழ்வான செய்தி!