சட்டவிரோதமாக பிரித்தானியா சென்றால் இனி சிக்கல்!

சட்டவிரோதமாக புலம்பெயர்ந்து பிரித்தானியாவிற்குள் நுழைய முயற்ச்சிப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் அறிவித்துள்ளார்.

சட்டவிரோதமான முறையில் புலம்பெயர்ந்து பிரித்தானியாவிற்குள் நுழைபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் அத்தோடு அவர்கள் நாடு கடத்தப்படுவார்கள்.

மேலும் அவர் குறிப்பிடுகையில் புலம்பெயர்ந்தோர் வரும் படகுகளை நிறுத்துவதற்குரிய மசோதா சட்டமாக்கப்படவுள்ளதாகவும் அதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இனி சட்டவிரோதமாக புலம்பெயர்ந்து பிரித்தானியாவிற்கு சென்றால் கைது செய்து நாடு கடத்தபடுவார்கள் என கடுமையாக வலியுறுத்தி கூறியுள்ளார்.