கடும்மழை காரணமாக வெள்ளக்காடான வவுனியா 23 குடும்பங்களைச் சேர்ந்த 63 பேர் பாதிப்பு !

வவுனியாவில் இன்று (03) பெய்த கடும் மழை காரணமாக 23 குடும்பங்களைச் சேர்ந்த 63 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 2 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

குறிப்பாக திருநாவக்குளம், மகாறம்பைக்குளம், வெங்கலசெட்டிக்குளம், பிரமநாலங்குளம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது.

மேலும் சில தெருக்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதேவேளை அறுவடைக்கு தயாராகும் முன்னரே நெற்செய்கைகள் வெள்ளத்தினால் நாசமாகியுள்ளதாகவும் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

மறுபுறம், வவுனியா நகரில் நேற்று (02) காலை முதல் இன்று (03) காலை வரை 189.2 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வவுனியா வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Previous articleயாழில் 108 ஏக்கர்காணி மக்களிடம் கையளிப்பு!
Next articleஇலங்கையில் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு அண்ணனை நம்பி பணம் அனுப்பிய தங்கைக்கு டாட்டா காட்டிய அண்ணன்