கொழும்பில் வெள்ளைவானில் கடத்தி கொலை செய்யப்பட்ட  இளைஞர்!

கொழும்பு மாளிகாவத்தை  அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் வசிக்கும் 24 வயதினை உடைய  இளைஞர் ஒருவரை அவரின் வீட்டிற்கு சென்ற குழு ஒன்று அவரை விசாரணைக்கு உட்படுத்த என அழைத்து சென்ற நிலையில் கடுமையாக தாக்கி சித்திரவதைக்கு உட்ப்படுத்தப்பட்டு அவர் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பிற்கு முன்னால் விட்டுச் செல்லப்பட்டுள்ளார்.

அதன் பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞன் உயிரிழந்துள்ளார்.இன் நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் தெமட்டகொட பொலிஸார் விசாரணைகளை ,மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleஅதிகரிக்கப்பட்ட லிட்ரோ எரிவாயுவின் புதிய விலைப்பட்டியல் வெளியானது
Next articleபிரபல திரைப்பட இயக்குநரும், நடிகருமான டி.பி கஜேந்திரன் உடல்நலக்குறைவால் காலமானார் !