மட்டக்களப்பு காத்தான்குடி பகுதியில் அடித்து கொல்லப்பட்ட 11 வயது சிறுவன்!

காத்தான்குடி பகுதியில் 11 வயது சிறுவன் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது

காத்தான் குடிப்பகுதியில் 11 வயதான அரீஃப் எனும் சிறுவனே இவ்வாறு அடித்துக் கொல்லப்பட்டதாக சிறுவனின் தந்தை பொலிசில் முறைப்பாடு செய்துள்ளார். தாயாரின் இரண்டாவது கணவரே இதனை செய்திருக்கலாம் என பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

கொடூரமாக தாக்கப்பட்ட சிறுவன் மட்டகளப்பு வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பெற்று வந்த நிலையில் நேற்று பிற்ப்பகல் உயிரிழந்தார். சந்தேக நபரான மாத்தளையை சேர்ந்த 26 வயது நபரை அன்றைய தினமே பொலிசரால் கைது செய்யப்பட்டுள்ளார்

சந்தேக நபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் 14ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிசார் மேலதிக விசாரணைகளை விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleவரிப்பணம் தொடர்பில் வெளியாகியுள்ள புதிய அறிவித்தல்
Next articleயாழ் பண்ணை கடற்கரையில் கரையொதுங்கிய சடலம் இனம் காணப்பட்டுள்ளது!