பாடப்புத்தகங்கள் தொடர்பில் கல்வி அமைச்சர் விடுத்துள்ள செய்தி

2023ஆம் ஆண்டிற்க்கான பாடசாலை மாணவர்களுக்கான பாடப்புத்தகங்கள் தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பொன்றை விடுத்துள்ளது அதற்கமைய தரம்  6 முதல் 11 வரையிலான வகுப்புகளுக்கு பாடப்புத்தகங்களை பகிர்ந்தளிக்க முன்னுரிமை அளிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் மஹரகம பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வருடாந்தம் பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்கு  4.5 பில்லியன் ரூபாய் செலவிடப்படுவதாகவும் இவ் வருடம் மட்டும் பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்கு  16 பில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.