சுவிட்சர்லாந்தில் யாழை சேர்ந்த மனைவியை கத்தியால் சரமாரியாக குத்திக் கொன்ற கணவன்

சுவிஸ்லாந்தில் கணவனால் குத்தி கொலை செய்யப்பட்ட பெண் தொடர்பில் மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளது உயிரிழந்த பெண் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் எனவும் கடந்த 25 வருடங்களாக சுவிஸ்லாந்தில் வசித்து வருகின்றார் அத்துடன் அவருக்கும மூன்று பிள்ளைகளும் உள்ளனர்.

இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையில் அண்மைக்காலமாக முரண்பாடுகள் இடம்பெற்று வந்துள்ளன அந்த முரண்பாடு தற்போது விபரீதத்தில் முடிந்துள்ளது கடந்த புதன் கிழமை அன்று அவர் வேலை செய்யும் ஆர்கெவ் பகுதியிலுள்ள ரப்பர்ஸ்விஸ் பகுதியில் உள்ள பெர்னர்ஸ் எஸ்வெர்க் என்ற சிற்றுண்டிச்சாலையில் வைத்து கொல்லப்பட்டுள்ளார்.

சிற்றுண்டிச்சாலைக்குள் கத்தியுடன் நுழைந்த கணவர் மனைவியை சரமாரியாக குத்தியதில் சம்பவ இடத்திலே மனைவி உயிரிழந்துள்ளார். அவ் இடம் நோக்கி பொலிசார் சென்ற வேளை எந்தவித மறுப்பும் தெரிவிக்காமல் கொலையாளி பொலிசில் சரணடைந்துள்ளார்.

குறித்த சம்பவம் புலம்பெயர் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தினையும் ஏற்ப்படுத்தியுள்ளது

Previous articleமின்சார சபை ஊழியர்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்க கோரிக்கை!
Next articleசுவிஸில் கணவனால் குத்தி கொலை செய்யப்பட்ட யாழ். பெண் ! வெளியான முழு விபரம் !