வவுனியாவில் சற்றுமுன் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி !

வவுனியாவில் சற்றுமுன் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவமானது இன்று வவுனியா மூன்று முறிப்பு பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் குறித்த பகுதியை சேர்ந்த 40 வயதான 3 பிள்ளைகளின் தந்தை என தெரியவந்துள்ளது.

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற பேருந்து துவிச்சக்கரவண்டியில் பயணித்த ஒருவர் மீது மோதியதிலேயே இவ் விபத்து சம்பவித்துள்ளது.

Previous articleமட்டக்களப்பு பகுதியில் கஞ்சாவிற்ப்பனையில் ஈடுபட்ட பெண் ஒருவர் கைது
Next articleயாழில் நிலநடுக்கம் வர வாய்ப்பிருப்பதால் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை !