நாட்டிற்கு சர்வதேச நாணயநிதியம் உதவி வழங்கிய பின்னரே ஏனைய நாடுகளின் உதவி கிடைக்கும்

இலங்கைக்கு பொருளாதார உதவிகளை வழங்க சர்வதேச நாடுகள் தயாராக இருப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவரும் அதிபரின் ஆலோசகருமான ருவன் விஜயவர்தன கூறியுள்ளார்.

சர்வதேச நானயநிதியத்தின் உதவிகள் கிடைக்கப்பெற்ற பின்னரே ஏனைய உதவிகள் இலங்கைக்கு கிடைக்குமென  சிறிகொத்தவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இது குறித்து கூறியுள்ளார்.

மேலும் நாட்டில் ஏற்ப்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு ஜக்கிய தேசியக் கட்சி காரணமில்லை முன்னாள் அதிபர்களின் தவறான ஆலோசனையினாலே நாட்டிற்கு இந்நிலைமை ஏற்ப்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்

வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை கட்டியெழுப்ப நாட்டிற்கு சர்வதேச நாணயநிதியத்தின் உதவி கிடைக்கும் சர்வதேச நாணயநிதியம் உதவி வழங்கிய பின்னரே ஏனைய நாடுகளான ஜப்பான், இந்தியா, அமெரிக்கா, சீனா போன்ற பல நாடுகளின் உதவிகளும் கிடைக்கப் பெறுமெனவும் அவர் மேலும் கூறிப்பிட்டுள்ளார்

Previous articleஇன்றைய ராசிபலன் 05.03.2023
Next articleதங்கத்தின் விலையில் வீழ்ச்சி!