வவுனியா சிறையில் திடீரென உயிரிழந்த கைதி!

வவுனியா விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் சுகவீனம் காரணமாக இன்று (5) உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் கைது செய்யப்பட்டு வவுனியா விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அந்த நபருக்கு இன்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இதனையடுத்து அவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இதில் கருணாரத்ன பண்டார என்ற 56 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

Previous articleமாணவர்களுக்கு கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள மகிழ்ச்சி செய்தி!
Next articleஇன்றைய ராசிபலன் – 07/03/2023