டொலர்களை மாற்றிக் கொள்ள நீண்ட வரிசையில் காத்திருக்கும் இலங்கை மக்கள்

அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளமையால் டொலரை பதுக்கி வைத்திருந்தவர்களுக்கு தற்போது பாதிப்பு ஏற்ப்பட்டுள்ளது.

ஆகையால் இதுவரை பதுக்கி வைத்திருந்த டொலரை மாற்றிக் கொள்வதற்கு பண பரிவர்த்தனை நிலையங்களுக்கு அருகில் மக்கள் மிக நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். கடந்த மார்ச் முதலாம் திகதி அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி 360 ரூபாவாக காணப்பட்ட நிலையில்  கடந்த 3 நாட்களாக அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி வேகமாக சரிவடைந்துள்ளது.

இந் நிலையில் டொலரின் பெறுமதி மேலும் குறைவடையும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் மக்கள் டொலர்களை மாற்றிக் கொள்ள முண்டியடிக்கின்றனர்.இந்நிலையில், இலங்கையில் கடந்த மாதங்களில் கடவுச்சீட்டை சமர்ப்பித்தவர்களுக்கு மாத்திரமே,டொலர் பரிவர்த்தனை செய்யப்பட்டது. அத்தோடு மக்கள் அதிக விலையில் டொலர்களை மாற்றிக் கொள்ள வேறு வேறு பரிவர்த்தனை நிலையங்களை நாடுகின்றமையும் குறிப்பிடத்தக்கது