நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்க போராட்டத்தினால் அரசிற்கு பாரிய நஷ்டம்

நேற்றைய தினம் மேற்க்கொள்ளப்பட்ட தொழிற்சங்கப் போராட்டம் காரணமாக அரசாங்கத்திற்கு நான்கு பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

துறைமுகம், ரயில்வே, தபால், இலங்கை மின்சாரசபை உள்ளிட்ட பல அரசாங்க நிறுவனங்கள் நேற்றைய தினம் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தினை முன்னெடுத்தன இதனால் நான்கு பில்லியன் ரூபா நஷ்டம் அரசிற்கு ஏற்ப்பட்டுள்ளதாக நிதி அமைச்சின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசின் நாள் ஒன்றில் மொத்த வருமானம் 10 பில்லியன் ரூபா எனத் தெரிவிக்கபப்டுகின்றது இந்நிலையில் பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக ஏற்பட்ட நட்டத்தை துல்லியமாக மதிப்பீடு செய்ய முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தினால் பல்வேறு அரசாங்க நிறுவனங்களின் அன்றாட நடவடிக்கைகள் ஸ்தம்பிதம் அடைந்ததாக குறித்த அதிகாரி தெற்கு ஊடகமொன்றிடம் தெரிவித்துள்ளார்

Previous articleஇன்றைய ராசிபலன்16.03.2023
Next articleபுற்றுநோயால் உயிரிழந்த யாழ் இளைஞன்