பெரும் சோகத்தை ஏற்படுத்திய 25 வயது இளைஞனின் மரணம்!

தெஹிவளையில் இடம்பெற்ற விபத்தொன்றில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று முன்தினம் தெஹிவளை புகையிரத நிலையத்திற்கு அருகில் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

25 வயதான ரவிந்து சஹான் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.

புகையிரத பாதைக்கு அருகில் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்த அவர் புகையிரதத்தில் மோதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Previous articleஇன்றைய ராசிபலன் 20/03/2023
Next articleயாழில் சங்கிலிய மன்னனின் உருவச்சிலை திறப்பு!