இலங்கையில் மீண்டும் தங்கத்தின் விலை அதிகரிக்கும் வாய்ப்பு!

இலங்கையில் இன்றைய தினம் 24 கரட் 8 கிராம் அதாவது 1 பவுண் தங்கத்தின் விலை 172,000 ரூபாவாக தங்கநகை விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த காலங்களில் இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக 22 கரட் தங்கப் பவுண் ஒன்று வரலாறு காணாத வகையில் உயர்ந்து 200,000 ரூபாவை எட்டியிருந்தது.

எனினும் கடந்த சில நாட்களாக குறைந்து 150000 என விற்பனையான நிலையில் தற்போது மீண்டும் சடுதியாக அதிகரித்துள்ளது.

இன்றைய தங்க விலை நிலவரம்

 இன்றைய தினம் 24 கரட் 8 கிராம் அதாவது 1 பவுண் தங்கத்தின் விலை 172,000 ரூபாவாக உள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை 22 கரட் 8 கிராம் அதாவது 1 பவுண் தங்கத்தின் விலை 158,300 ரூபாவாக பதவாகியுள்ளது.

அதன்படி 24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 22,190.00

24 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 177,450.00

22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 20,350.00

22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 162,750.00

21கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 19,420.00

21 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 155,350.00