நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் அத்தியாவசிய பொருட்களின் விலை !

இலங்கையில் அரிசி, சீனி, பருப்பு போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கொள்கலன் போக்குவரத்து கட்டண அதிகரிப்பால் பொருட்களின் விலைகள் உயரும் என தெரிவிக்கப்படுகிறது.

கொள்கலன் போக்குவரத்து தொடர்பான பரிந்துரைக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், கொள்கலன்களுக்கான கட்டண நிர்ணயம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் மார்ச் 23ஆம் திகதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

வர்த்தமானி அறிவித்தல் இரத்துச் செய்யப்பட்டமையினால், இறக்குமதியாளர்கள் இந்தக் கட்டணங்களைச் சுமக்க நேரிடும் எனவும், இதன் சுமை நுகர்வோர் மீது சுமத்தப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த போக்குவரத்து கட்டணங்கள் சீனி, அரிசி மற்றும் பருப்பு போன்ற அன்றாட நுகர்வு பொருட்களின் விலைகளை பாதிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறக்குமதியாளர்கள் உள்ளிட்ட உரிய தரப்பினருடன் கலந்துரையாடாமல் வர்த்தமானி அறிவித்தல் இரத்துச் செய்யப்பட்டமையினால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக சீன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜீ.எம். அபேசேகர தெரிவித்தார்.