சட்டவிரோதமான முறையில் இயங்கிய கோழி இறைச்சிக் கடைக்கு சீல் வைப்பு!

ஹப்புத்தலையில் கோழி இறைச்சி கடையொன்றுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹப்புத்தளை நகரில் கோழி இறைச்சி கடை ஒன்றில் சட்ட விரோதமான முறையில் மாட்டிறைச்சி விற்கப்படுவதாக ஹப்புத்தளை சுகாதார பரிசோதகர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனை அடுத்து குறித்த கோழி இறைச்சி கடையினை சோதனைக்கு உட்படுத்திய போது கோழி இறைச்சி கடையில் இருந்து மாட்டிறைச்சி மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த கோழி இறைச்சி கடை உரிமையாளருக்கு எதிராக வழக்கு தொடரப்பட உள்ளதாகவும் பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.