வாட்ஸ்பின் புதிய அப்டேட்

பல்வேறு புதிய அம்சங்களை வழங்குவதாக வரும் தகவலை நம்பி பிங்க் வாட்ஸ் அப்பை தொட்டால் ஸ்மார்ட் போன் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்காது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்களைக் கொண்டுள்ள அப் இப்போது குறிவைக்கப்பட்டிருக்கிறது.

ஏற்கெனவே வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தி வரும் பயனர்களுக்கு அண்மையில் ஒரு மெசேஜ் அனுப்பப்படுகிறது.

அந்த மெசேஜில் வரும் லிங்கை கிளிக் செய்தால் வாட்ஸ் அப் லோகோ பிங்க் நிறத்திற்கு மாறும் என்றும் அதை தொடர்ந்து வாட்ஸ் அப் பல்வேறு அப்டேட்களைப் பெறும் எனவும் அந்த மெசேஜில் கூறப்பட்டிருக்கும்.

அந்த லிங்கை கிளிக் செய்தால் வரக்கூடிய விபரீதங்களை வெளிப்படுத்தியுள்ளது.

அதுமட்டுமின்றி தெரியாமல் கூட பிங்க் வாட்ஸ்அப்பை டவுன்லோட் செய்ய வேண்டாம்.

அதுமட்டும் அன்றி டவுன்லோட் செய்வதற்கான லிங்க்-ஐ கூட கிளிக் செய்ய வேண்டாமென்று வாட்ஸ்அப் பயனர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.