மக்களை ஏமாற்றும் சஜித்

தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வீடமைப்பு அமைச்சராக இருந்த போது மக்களுக்கு வீடு கட்டித் தருவதாக வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் வவுனியா, நொச்சிக்குளம் மற்றும் தெலுங்கு கிராம மக்கள் தற்போது கடும் நெருக்கடியில் உள்ளனர்.

நொச்சிக்குளம் கிராமத்தில், கிராம மக்களுக்கு 22 வீடுகள் கட்டிக்கொடுக்க, வீடு ஒன்றுக்கு 7 இலட்சம் ரூபாய் வழங்குவதாக முன்னாள் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

இதன்படி, முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாச தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக கிராம மக்களுக்கு 1 லட்சம் ரூபா தொடக்கம் 3 லட்சம் ரூபா வரையான தொகையை வழங்கியுள்ளார்.

எனினும் வவுனியா, நொச்சிக்குளம், தெலுங்கு கிராம மக்களுக்கு குறித்த தொகை கிடைக்காததால் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

அப்போது வாழ்வாதாரம் கூட இல்லாத இக்கிராம மக்கள், புதிதாக கட்டப்படும் வீடுகளின் சுவர்களை ஒட்டி மண் குடிசைகளில் வசித்து வருகின்றனர். அவர்கள் வசிக்கும் நிலத்திற்கு உரிமைப் பத்திரம் கூட இல்லை.

தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் வழமை போன்று வீட்டுக் கனவுகளை காட்டி ஏமாற்றி விட்டதாக இக்கிராம மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

இவர்கள் மிகவும் ஏழ்மையான மக்கள். விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல் காரணமாக 1985 ஆம் ஆண்டு நொச்சிக்குளம், தெலுங்கு கிராமத்தை விட்டு வெளியேறிய கிராம மக்கள் கடந்த 2012 ஆம் ஆண்டு நொச்சிக்குளம் கிராமத்திற்கு திரும்பினர்.

வவுனியா, நொச்சிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த தயானி பின்வருமாறு தெரிவித்தார்.

நாங்கள் இன்னும் தகரக் கூரையுடன் கூடிய குடிசைகளில் வாழ்கிறோம். நாங்கள் பல ஆண்டுகளாக பூரணப்படுத்தப்படாத வீடுகள் கட்டி வசிக்கிறோம்.

இந்த அரசிடமிருந்து எங்களுக்கு உதவி கிடைக்கும் என்று நம்புகிறோம். எங்களது பிரச்சினைகளை பார்க்க யாருமில்லை. இந்த அரசும் எங்களுக்கு உதவி செய்தால் நல்லது.

இப்போது நாம் சாத்திரம் கூறி பணத்தைத் தேடி சாப்பிட்டு விலை வீடுகளைக் கட்டி வாழ முடியாது. எனவே வீடுகளை நிர்மாணிப்பதற்கு நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.

ஒரு குழந்தைக்கு தனியாக பாடசாலைக்குச் செல்ல முடியாது. பாடசாலைக்குச் செல்லும் பாதையில் ஏறக்குறைய இரண்டு மைல் காடாக உள்ளது. அதனால்தான் எங்களைப் பற்றி யோசித்து எங்களுக்கு உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று தெரிவித்தார்.

வவுனியா நொச்சிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த விஜய் தெரிவிக்கையில்,

வீடுகளை கட்டுவதற்கு 750,000 ரூபாவை வழங்குவதாக தேர்தலுக்கு முன்னர் சஜித் வாக்குறுதி அளித்திருந்தார். அதன்படி, 1 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. அந்தப் பணத்தில் ஐந்து லோட் கற்கள் கட்டப்பட்டுள்ளன.

எங்களுக்கு மிகுதி கிடைக்கவில்லை. நாங்கள் இப்போது ஒரு குடிசையில் இருக்கிறோம். நாங்கள் உண்மையில் ஆதரவற்றவர்கள். நான் ஊனமுற்றவன். ஒரு வேலையும் செய்ய முடியாது. யாரிடமாவது எதையாவது கேட்டு வாழ்கிறேன். இந்த வீட்டின் மிகுதியைக் கட்ட நீங்கள் எங்களுக்கு உதவினால் நன்றாக இருக்கும்.