குழந்தைகளுக்கு தொலைபேசி கொடுக்காதீர்கள்

மனநலம் குன்றி பெற்றோரை எதிரிகளாக கருதும் அவலம் குழந்தைகளிடம் கைப்பேசிகளை கொடுக்க வேண்டாம் – னுச ரூமி ரூபன்
கையடக்க தொலைபேசி மற்றும் இணையம் ஆகியவற்றின் அதிக பயன்பாடு காரணமாக குழந்தைகளுக்கு ஞாபக மறதி ஏற்படுவதற்கான சாத்தியம் உள்ளதாக மருத்துவர் ரூமி ரூபன் தெரிவித்துள்ளார்.
குழந்தைகள் வெகுவாக இணையக் காணொளியில் விளையாட்டுகளுக்கு அடிமையாகின்றனர்.
இணையக் காணொளி விளையாட்டு போட்டிகளில் குழந்தைகள் தீவிரமாக அவதானம் செலுத்துதால் மனநல நோய்க்கு உள்ளாகின்றனர். இதனால் பிள்ளைகள் கல்வியில் தோல்வியடைந்து பெற்றோரை எதிரிகளாக நோக்குகின்றனர்.
இதனால் குழந்தைகளின் எதிர்காலம் முற்றாக அழிந்துவிடும். எனவே குழந்தைகளுக்கு இயன்றவரை கையடக்க தொலைபேசியை வழங்குவதை பெற்றோர் தவிர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் மருத்துவர் ரூமி ரூபன் கேட்டுக்கொண்டுள்ளார்.