மண்மேடு சரிந்து விழுந்ததில் நபர் ஒருவர் உயிரிழப்பு!

நாவலப்பிட்டி மஹகும்புரு பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று (02) பிற்பகல் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புதிதாக கட்டப்படும் தடுப்பணையின் அஸ்திவாரம் வெட்டிக்கொண்டிருந்தவரின் மீது மண் மேடு சரிந்து விழுந்துள்ளது.

குறித்த மண்மேடு அகற்றப்பட்டு நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

நாவலப்பிட்டி, வெரலுகஸ்ஹின்ன பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

Previous articleஇன்றைய ராசிபலன்03.08.2023
Next articleபிரபல போதைபொருள் வியாபாரி கைது!