ஜனாதிபதி தலைமையில் இன்று முக்கிய அமைச்சரவை கூட்டம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று பிற்பகல் முக்கிய அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது.விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் ஒரு பகுதியாக சுமார் 330 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கான இரண்டாம் தவணைக்கான பணியாளர் மட்ட ஒப்பந்தத்தில் சர்வதேச நாணய நிதியத்துடன் கைச்சாத்திட அரசாங்கம் தயாராகி வரும் நிலையில் ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.இந்த ஒப்பந்தங்கள் தொடர்பான விவரங்கள் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தின் போது விவாதிக்கப்படும்.ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி அமெரிக்கா சென்றிருந்தமையினால், வாராந்த அமைச்சரவைக் கூட்டம் கடந்த வாரம் நடைபெறவில்லை.ஜனாதிபதி தனது அமெரிக்க விஜயத்தின் போது எட்டப்பட்ட கலந்துரையாடல்கள் மற்றும் உடன்படிக்கைகள் குறித்தும் இன்று அமைச்சரவையில் விளக்கமளிக்கவுள்ளார்.