மக்களால் வெறுக்கப்பட்ட அரச அதிபராக ஓய்வு பெறும் கலாமதி பத்மராஜா!

 மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா சேவைகால நீடிப்பு இன்று புதன்கிழமை (27) மறுக்கப்பட்டு கடிதம் பொது உள்நாட்டு அமைச்சு அறிவித்ததையடுத்து அவர் எதிர்வரும் 29 ஆம் திகதி 60 வயதில் ஓய்வூதியம் பெற்றுச் செல்கின்றார்.

மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா கடந்த ஜனவரி 18 ம் திகதி மாவட்ட அரசாங்க அதிபராக கடமையை பெறுப்பேற்று கடமையாற்றிவரும் இவர் எதிர்வரும் 29 ம் திகதி 60 வயதை பூர்த்தியடைந்த நிலையில் அரச சேவையில் இருந்து ஓய்வூதியம் பெற்றுகின்றார். 

இந்த நிலையில் தனது ஓய்வூதிய காலத்தின் பின்னர் தொடர்ந்து அரச சேவையில் கடமையாற்றுவதற்கு பொது உள்நாட்டு அமைச்சிடம் சேவை கால நீடிப்பு கோரியுள்ள நிலையில் கால நிடிப்புக்கு அனுமதி மறுக்கப்பட்டு கடிதம் இன்று அனுப்பபட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட மக்கள் எதிர்நோக்கிய பல சவால்கள் பல போராட்டங்கள் மக்கள் நலம் சார்ந்த அபிவிருத்தி திட்டங்கள் இவை அனைத்தும் தனது அரசாங்க அதிபராக இருந்த காலத்துக்குள் பூரணமாக பூர்த்தி செய்ய முடியாத ஒரு அரசாங்க அதிபராக விடை பெற்று செல்வதாக பலராலும் பேசப்படுகின்றது. 

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரை தொடர்ச்சியாக இன்னும் சில காலங்களுக்கு நீடிப்பதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு இராஜாங்க அமைச்சர்களும் எடுத்த கடும் முயற்சியும் தோல்வி அடைந்துள்ளதாகவும் அரசாங்க அதிபரின் கால நீடிப்பை ஜனாதிபதி நிராகரித்துள்ளதாகவும் அறிய முடிகின்றது.

கடந்த 13 தினங்களாக கால்நடை பண்ணையாளர்கள் தங்களது அறவழிப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்ற போதிலும் தன்னால் ஒரு தீர்வை வழங்க முடியாது என்று இன்றுவரை அந்தப் பண்ணையாளர்களை சந்திக்காமல் ஏமாற்றி சென்றுள்ளார்.

கடந்த காலங்களில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக இருக்கும் போது பண்ணையாளர்களுக்கு உதவி செய்ததன் காரணமாக இடமாற்றம் செய்யப்பட்ட கலாமதி பத்மராஜா தனது சேவை காலத்துக்குள் தனது பெயருக்கு எந்த களங்கமும் வரக்கூடாது என்பதற்காக மௌனமாக இருந்து விடை பெற்று செல்கின்றார்.

இதனையடுத்து அவர் எதிர்வரும் 29 ம் திகதியுடன் சேவையில் இருந்து ஓய்வு பெற்றுச் செல்லும் இவருக்கு இன்று பிரியாவிடை கச்சேரியில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.