தங்க நகை பிரியர்களுக்கான செய்தி!

 செப்டம்பர் மாத தொடக்கம் முதலே தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் கடந்த நாட்களாக தங்கத்தின் விலை குறைவடைந்து வருகின்றமை நகை வாங்க காத்திருந்தோருக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்தவகையில் சென்னையில் நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்த நிலையில் இன்று மீண்டும் அதிரடியாக குறைந்துள்ளது .

இன்றைய தங்கவிலை நிலவரம்

அதன்படி, 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.5,390ஆகவும், சவரனுக்கு ரூ.160‬‬ குறைந்து ஒரு சவரன் ரூ.43,120 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.17 குறைந்து ஒரு கிராம் ரூ.4,415 ஆகவும், சவரனுக்கு ரூ.136‬‬ குறைந்து ஒரு சவரன் ரூ.35,320 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை உயர்வு

வெள்ளி விலை மட்டும் அதிரடியாக கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.77.50 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.77,500 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.