நீராட சென்ற சிறுவன் மாயம்!

காலி – கொக்கல பகுதியில் உள்ள கடலில் நீராடச்சென்ற 14 வயதுடைய சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வரகாபொலவில் இருந்து சுற்றுலா சென்று கொக்கல முகத்துவாரத்திற்கு அருகில் உள்ள கடலில் நீராடச் சென்ற சிறுவனேநேற்றையதினம் மாலை கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக ஹபராதுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வரகாபொல, மில்லகஹதொல, கணித்தபுர பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய சிவ ஆகாஷ் என்ற சிறுவனே

கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

மேலும், காணாமல் போன சிறுவனை கண்டுபிடிக்க கடற்படை வீரர்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த மாதம் எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தில் இருந்து வந்த மாணவன் ஒருவரும் இந்த இடத்தில் கடலில் மூழ்கி உயிரிழந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.