குழப்பத்தை ஏற்ப்படுத்த முனையும் கோட்டபாய!

பதவியில் இருந்து நீக்கப்பட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் எழுதப்பட்டதாக கூறப்படும் புத்தகம் இன்று வெளியிடப்படவுள்ளது.

இந்நிலையில் குறித்த புத்தகத்தின் ஆரம்பமும் முடிவும் சிக்கலாக உள்ளதென குறிப்பிடப்படுகின்றது.

பிரசுரத்தின் அட்டையில் “என்னை ஜனாதிபதி பதவியில் இருந்து வெளியேற்றிய சதி” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

பதவி நீக்கம்
ஆனால் பின் அட்டையில் 2022ஆம் ஆண்டு ஜுலை மாதம் நான் அந்தப் பதவியை ராஜினாமா செய்ய வேண்டியிருந்தது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முதல் அட்டையில், பதவியில் இருந்து நீக்கப்பட்டதாகவும் பின் அட்டையில், தான் இராஜினாமா செய்ய வேண்டியிருந்தாகவும் உள்ளமையினால் 2 விடயங்கள் தொடர்பாக இரண்டு எதிர் கருத்துக்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

“ராஜபக்சவை பதவி நீக்கம் செய்த சர்வதேச ஆதரவுடன் அமைதியான மக்கள் போராட்டம் இலங்கையின் ஜனநாயகத்தை கீழறுக்கும் செயலாகும்” என முகப்பு அட்டையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.