மியன்மாரில் இருந்து விடுவிக்கப்பட்ட இலங்கையர்கள்!

மியன்மாரில் உள்ள இணைய அடிமை முகாமில் இருந்து மீட்கப்பட்ட எட்டு இலங்கையர்கள் தாய்லாந்து ஊடாக நாடு திரும்புவதற்கு தயார் நிலையில் உள்ளதாக மியன்மாருக்கான இலங்கைத் தூதுவர் ஜனக பண்டார உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில், தாய்லாந்து அதிகாரிகள் அவர்கள் பாதுகாப்பான பயணத்திற்கான போக்குவரத்து விசாக்களை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக ஜனக பண்டார மேலும் தெரிவிக்கையில், மியன்மாரில் சைபர் குற்றங்களில் ஈடுபடுத்துவதற்கென ஆட்கடத்தல் கும்பலால் கடத்தப்பட்டு 56 இலங்கை இளைஞர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் முடிவடைந்து எட்டு பேர் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

சைபர் குற்றங்கள்

இந்நிலையில், அவர்களை விரைவில் நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், மியன்மாரில் தற்போது 48 இலங்கையர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களும் விரைவில் மீட்கப்படுவார்களென ஜனக பண்டார குறிப்பிட்டுள்ளார்.

கடத்தப்பட்ட இலங்கையர்கள் சைபர் குற்றங்களில் ஈடுபடுத்துவதற்கென ஆட்கடத்தல் கும்பலால் கடத்தப்பட்டதுடன் தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலைபெற்றுத் தருவதாகக் கூறி இவர்கள் கடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.