பணிப்புறக்கணிப்புக்கு தயராகும் ஆசரியர்கள்!

எதிர்வரும் 29ஆம் திகதி முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அகில இலங்கை ஆசிரியர் சங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டு வரும் னோரிக்கைகள் நிறைவேற்றப்படாமை தொடர்வதனாலேயே குறித்த போராட்டத்தினை முன்னெடுப்பதாக ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்போது, குறிப்பாக தேசிய கல்வியியற் கல்லூரியை பல்கலைக்கழகமாக தரமுயர்த்துதல், கல்லூரி விரிவுரையாளர்களுக்கு தடையில்லா பதவி உயர்வு முறையை நடைமுறைப்படுத்துதல், பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் கொடுப்பனவை வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்படவுள்ளன.

விடுக்கப்பட்டுள்ள கோரிக்கைகள்
மேலும், இந்தக் கோரிக்கைகள் தொடர்பில் கல்வி அமைச்சுடன் அவ்வப்போது கலந்துரையாடப்பட்ட போதிலும் இதுவரையில் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வு கிடைக்கவில்லை.

அதனை வெற்றி கொள்ளும் நோக்கில் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது மாத்திரமன்றி, கல்லூரிகளை பல்கலைக் கழகமாக தரம் உயர்த்துவது தொடர்பில் வரைவுத் துறைக்கு அனுப்பப்பட்டுள்ள வரைவு சட்டமானது தேர்தலுக்கு முன் நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் ஆசிரியர் சங்கம் கூறியுள்ளது.