கொள்ளையிடும் நோக்கில் வீடொன்றுக்குள் இரகசியமாக நுழைந்த நபருவரை அடித்து கொன்ற குடும்பம்!

கொள்ளையிடும் நோக்கில் வீடொன்றுக்குள் இரகசியமாக நுழைந்த நபரொருவரை வீட்டார் தாக்கியதில், அவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் வத்தளை – எவரிவத்த பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஸ்ட பிரதி பொலிஸ் மாதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

32 வயது மதிக்கதக்க நபரொருவர் வத்தளை – எவரிவத்த பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் நேற்றிரவு நுழைந்துள்ளார்.

இதன்போது வீட்டிக்குள் யாரோ நுழைந்ததை உணர்ந்த வீட்டார் சந்தேக நபரை பிடித்து தாக்கிய நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

எவ்வாறாயினும் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ள பொலிசார் தண்டனை சட்டக்கோவையின் 96 ஆவது பிரிவின் பிரகாரம், இவ்வாறு கொள்ளையிடும் நோக்குடன் இரவு வீட்டுக்குள் நுழைபவர்களை தாக்குவதற்கு சட்டத்தில் இடமுள்ளது என பொலிஸ் மாதிபர் தெரிவித்தார்.

அத்துடன் இதன் போது ஏற்பட கூடிய மரணங்கள் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்ததுடன் , சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

Previous articleதொடர்ந்தும் கரையொதுங்கும் தீப்பற்றி எரிந்த கப்பல் கழிவுகள்!
Next articleயாழில் நடந்த கோர விபத்தில் இரு பெண்கள் படுகாயம்!