கிளிநொச்சி ஏ-9 நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் படுகாயம்!

கிளிநொச்சி ஏ-9 நெடுஞ்சாலையில் நேற்று (10) இரவு 7.30 மணியளவில் இடம்பெற்ற விபத்துச் சம்பவம் ஒன்றில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

கிளிநொச்சியில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த டிப்பர் வாகனத்தை அதே திசையில் பயணித்த மற்றொரு டிப்பர் வாகனம் முந்திச் செல்ல முற்பட்டபோது எதிரே வந்த மோட்டார சைக்கிளை மோதியதால் விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியைச் சேர்ந்த பாஸ்கரலிங்கம் பிரசன்னா (வயது 30) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே படுகாயம் அடைந்துள்ளார்.

படுகாயம் அடைந்த அவர் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleயாழ் சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் உயிரிழப்பு
Next articleநோர்வே நாட்டில் மூன்று பிள்ளைகளின் இளம் தாய் ஒருவர்பரிதாப மரணம்!