நீண்ட நாள் விடுமுறையில் பயணக்கட்டுப்பாடா? அனைத்தும் நிறுத்தப்படும் என இராணுவத்தளபதி சவேந்திர சில்வா எச்சரிக்கை

வார இறுதியில் வரும் நீண்ட விடுமுறையை முன்னிட்டு பயணத்தடை விதிப்பது தொடர்பாக இதுவரை எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டார். கட்டுப்பாட்டு நடைமுறைகளை தொடர்ச்சியாக மீறினால், திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளை உடனடியாக நிறுத்துவதற்கான நிலை ஏற்படக்கூடும் எனவும் இராணுவத் தளபதி எச்சரித்தார்..

இந்நிலையில், இதுவரை 38 பேருக்கு டெல்டா திரிபு தொற்றியுள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது.இதேவேளை, இன்றும் பல இடங்களில் COVID தடுப்பூசி ஏற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

கொழும்பு மாவட்டத்தில் 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையை இந்த மாதத்திற்குள் நிறைவு செய்ய எண்ணியுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்