சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்டமைக்கு பாக்கியம் செய்துள்ளேன் – கெஹெலிய

இலங்கையின் சுகாதார அமைச்சராக நியமிக்கப்படுவதற்கு பாக்கியம் செய்துள்ளதாக புதிய சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

ஊடகத்துறை அமைச்சராக பதவி வகித்த கெஹலிய ரம்புக்வெல்ல, சுகாதார அமைச்சராக இன்று (திங்கட்கிழமை) நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், பதவி மாற்றம் குறித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், முன்னாள் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தொற்றுநோயைக் கையாள்வதில் சிறப்பாகச் செயற்பட்டமைக்கு நன்றி தெரிவித்தார்.

மேலும் கொரோனா சவாலை தோற்கடிக்க அனைத்து குடிமக்களும் ஒத்துழைப்பை வழங்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

Previous articleமேலும் 167 கொரோனா மரணங்கள் பதிவு!
Next articleயாழில் 19 வயது யுவதி ஒருவர் தற்கொலை!