கொவிட் தொற்று மற்றும் இறப்புகள் குறித்த புள்ளி விபர தரவுகளில் சில முரண்பாடுகள்!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோர்கள் மற்றும் இறப்புகள் குறித்து வெளியிடப்பட்ட புள்ளிவிபர தரவுகளில் சில முரண்பாடுகள் இருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

தொற்று நோயியல் பிரிவினால் வெளியிடப்பட்ட புள்ளிவிபர தரவுகளில், கம்பஹா மாவட்டத்திலும், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் உள்ள சில மாவட்டங்களில் சில முரண்பாடுகள் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இவற்றை முடிந்த வரை விரைவாக சரி செய்து, சரியான புள்ளி விபர தரவுகளை சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, நாட்டில் இதுவரை 12,919,193 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது. அதேபோல 5,124,185 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளது