நாட்டின் மரண எண்ணிக்கையை வரையறுப்பதே எங்களது பிரதான இலக்கு – சவேந்திர சில்வா

நாட்டின் மொத்த சனத் தொகையில் 43 வீதமானவர்களுக்கு கோவிட் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது நாள் வரையில் நாட்டின் மொத்த சனத் தொகையில் 43 வீதமானர்களுக்கு ஒன்று அல்லது இரண்டு மாத்திரை தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

ஐந்து வகையான சுமார் 19.7 மில்லியன் தடுப்பூசிகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், இதில் 14.97 மில்லியன் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு மாத்திரை தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்டவர்களின் எண்ணிக்கை ஐந்து மில்லியன் என தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி ஏற்றும் நிலையங்கள் காணப்பட்டாலும் சிலர் அதற்கு வருவதற்கு விரும்பாத காரணத்தினால் நடமாடும் தடுப்பூசி நிலையங்கள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், நாட்டின் மரண எண்ணிக்கையை வரையறுப்பதே தங்களது பிரதான இலக்கு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Previous articleஇன்று முதல் எதிர்வரும் 30ஆம் திகதி வரை நாடு முடக்கப்படவுள்ளது.
Next articleகொவிட் தொற்று மற்றும் இறப்புகள் குறித்த புள்ளி விபர தரவுகளில் சில முரண்பாடுகள்!