யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலைய மலசலகூடத்தில் இப்படி ஒரு அவலம்!

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள மலசலகூடம் கேட்பாரற்ற நிலையில் அசுத்தமாக காணப்படுகின்றதாக விசனம் வெளியிடப்பட்டுள்ளது.

தூர பிரதேசங்களில் இருந்து வரும் பயணிகள் இயற்கை உபாதை கழிக்க மலசல கூடத்தை பாவிக்க முடியாத நிலையில் காணப்படுகிறதாக பயனிகள் விசனம் வெளியிட்டுள்ளனர். இதன் காரணமாக பயணிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

எனவே பொறுப்பு வாய்ந்தவர்கள் இது குறித்து கவனமெடுக்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

Previous articleஜேர்மனியில் கொரோனாக் கட்டுப்பாட்டுக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் வன்முறை! பொலிஸார் மீது தாக்குதல்!!
Next articleமின்சார தடையில் இருந்து இலங்கைக்கு விடுதலை…!