யாழில் இடம்பெற்ற விபத்து இரு இளைஞர்களுக்கு நேர்ந்த விபரீதம்….!

யாழில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் இரு இளைஞர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விபத்து சம்பவம் நேற்றிரவு (13-12-2021) திங்கட்கிழமை யாழ்.அச்சுவேலி சந்தியில் இடம்பெற்றுள்ளது.

மேலும், இச்சம்பவத்தில் இரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் காயமடைந்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணையை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleதிருமணம் ஒன்றில் நேர்ந்த விபரீதம்…..!
Next articleஓமிக்ரோன் தொற்றின் 5 முக்கிய அறிகுறிகள் எச்சரிக்கை தகவல்….!