யாழில் மோட்டார் சைக்கிளை வீதியில் போட்டு உடைத்த கும்பல்! சி.சி.ரிவியில் சிக்கிய காட்சி….!

யாழ்.கோண்டாவில் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது அதிகாலை கும்பல் வன்முறையில் ஈடுபட்டுள்ளது.

குறித்த கும்பல் வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளை எடுத்துச் சென்று வீதியில் போட்டு உடைக்கும் சி.சி.ரி.வி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் இன்று (23-12-2021) அதிகாலை 5.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

அதிகாலை வீட்டின் மீது தாக்குதல் நடத்திய கும்பல் அங்கிருந்த மோட்டார் சைக்கிளை கே.கே.எஸ் வீதியில் போட்டு உடைத்துள்ளது.இச்சம்பவம் அங்கிருந்த சி.சி.ரி.வி கமராவில் பதிவாகியுள்ளது. இதனடிப்படையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தொியவருகின்றது.

Previous articleவவுனியா வைத்தியசாலை வளாகத்தில் கொந்தளித்த நோயாளி!
Next articleமுல்லைத்தீவு சிறுமியின் கொலை தொடர்பில் வெளிவந்த தகவல்…!