கணவனுடன் ஏற்பட்ட தகராறில் தீக்குளித்த தாய், மகளுக்கும் தீ வைத்து தற்கொலை….!

திருச்சி அருகே குடும்பத் தகராறில் தாயும் மகளும் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டனர்.

திருச்சி வண்ணாங்கோவில் பகுதியில் வசிக்கும் சந்துருவுக்கும், அவரது மனைவிக்கும் தனிக்குடித்தனம் செல்வது தொடர்பாக பல நாட்களாக தகராறு ஏற்பட்டு வந்தது. பிரச்சனை பெரிதாகிய நிலையில், வீட்டில் சந்துரு இல்லாத நேரத்தில், அவரது மனைவி தனக்கு தீவைத்துக்கொண்டதோடு, தனது 3 வயது மகள் மீதும் தீ வைத்துள்ளார்.

வீட்டிலிருந்து புகை வெளிவருவதை கண்ட அக்கம்பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது தாயும் மகளும் கருகிய நிலையில் கிடந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleஉயிருக்கு போராடி 12 மணி நேரம் கடலில் நீந்தி கரையை சேர்ந்த அமைச்சர்.!
Next articleதிருவள்ளூரில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய கயவன் கைது.!