பலரையும் நெகிழவைத்த இலங்கை சிறுவன்! என்ன செய்தார் தெரியுமா?

மஹியங்கனை பிரதேசத்தை சேர்ந்த 11 வயதுடைய சிறுவன் ஒருவரின் செயல் பலருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மிகவும் வறுமையான குடும்பத்தை சேர்ந்த மாதவ கல்ஹார என்ற அந்த சிறுவன் தனது 71 வயதுடைய தாத்தாவுடன் உறவினர் வீட்டிற்கு சென்ற போது கீழே கிடந்த ஒரு தொகை பணத்தை வீதியில் கண்டெடுத்துள்ளார்.

அதில் 30 ஆயிரம் ரூபாய் பெறுமதியான நாணயத்தாள்கள் கிடந்துள்ளன. அதனை கையில் எடுத்த சிறுவன் இந்த பணத்தை உரிமையாளரை தேடி ஒப்படைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

உரிமையாளைரை எங்கு சென்று தேடுவது என தாத்தா வினவிய போது பொலிஸ் நிலையத்தில் ஒப்படைப்போம் என சிறுவன் கூறியுள்ளார். அதற்கமைய சிறுவன் தனது தாத்தாவுடன் பொலிஸ் நிலையத்திற்கு சென்று தான் கண்டெடுத்த பணத்தை ஒப்படைத்துள்ளார்.

இந்த பணத்தை ஏன் பொலிஸாரிடம் ஒப்படைக்க நினைத்தீர்கள் வீட்டிற்கு கொண்டு சென்றிருக்கலாமே என சிறுவனிடம் பொலிஸார் வினவியுள்ளார். எனது அப்பாவுக்காக தான் இதனை ஒப்படைக்க நினைத்தேன். அவர் மிகவும் சுகயீனமடைந்த நிலையில் உள்ளார்.

அதோடு எனது அப்பாவும் ஒரு பொலிஸ் அதிகாரி தான். எனது தந்தை சீக்கிரம் குணமடைய வேண்டும். நான் செய்யும் இந்த புண்ணியம் எனது தந்தைக்கு சென்றடைந்து எனது தந்தை குணமடைய வேண்டும் என சிறுவன் கூறியுள்ளார்.

சிறுவனின் பதிலை கேட்டு புளகாங்கிதம் அடைந்த பொலிஸ் அதிகாரி, இவ்வளவு சிறந்த மகனை வளர்த்த தந்தை சீக்கிரம் குணமடைந்து விடுவார் என ஆறுதல் கூறி சிறுவனை அனுப்பி வைத்துள்ளார். இந்நிலையில் குறித்த சிறுவனின் நேர்மையான குணத்திற்கு பல்லரும் பாராட்டுக்களை கூறி வருகின்றனர்.

Previous articleஒமிக்ரான் வைரசுக்கு எதிராக வருகிறது 100% நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட புதிய தடுப்பூசி….!
Next articleமேலும் நாட்டில் கொரோனா பலியெடுத்த எண்ணிக்கை…!