யாழிலிருந்து ஆற்றில் நீராடச் சென்று காணாமல் போன மூவரின் சிறுமிக்கு நேர்ந்த பரிதாபம்…!

ஹங்வெல்ல − துன்மோதர ஆற்றில் நீராடச் சென்று காணாமல் போன மூவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

இவ்வாறு காணாமல்போன மூவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த மூவரும் இன்று (30-12-2021) மாலை காணாமல் போயுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

இவ்வாறு நீரில் அடித்துச் சென்று காணாமல் போனவர்களில், 14 வயதான சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

காணாமல் போன ஏனைய இருவரையும் தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 6 பேர் நீரில் அடித்து சென்ற நிலையில், மூவர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து வெள்ளவத்தை வந்த நிலையிலேயே, இந்த குழுவினர், அவிசாவளை நோக்கி பயணித்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ஹங்வெல்ல − துன்மோதர பகுதியிலுள்ள குமார எல்ல ஆற்றில் நீராடச் சென்ற மூவர் காணாமல் போயுள்ளனர்.

14 வயதான இரு சிறுமிகள் மற்றும் 29 வயதான யுவதி ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை ஹங்வெல்ல பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

Previous articleஇன்றைய ராசிபலன் 31/12/2021
Next articleயாழில் தொடர் திருட்டில் ஈடுப்பட்டு வந்த நபரை மடக்கி பிடித்த பொலிஸார்!