இலங்கையின் தரைப் பகுதியை ஆக்கிரமித்த இந்தியா! “எண்ணெய் தாங்கிகள் மூலம் கைப்பற்றப்பட்ட திருகோணமலை”

அமைச்சர் உதய கம்மன்பில, இந்து சமுத்திரத்தின் கேந்திர இடத்தில் உள்ள திருகோணமலை துறைமுகத்தின் நுழைவு வாயிலில் இருக்கும் 14 எண்ணெய் தாங்கிகளை 50 ஆண்டுகளுக்கு இந்தியாவுக்கு விற்பனை செய்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க (Tissa Attanayake) தெரிவித்துள்ளார்.

இந்த 14 எண்ணெய் தாங்கிகள் இருக்கும் தொகுதியானது மிகவும் முக்கியமான பகுதியாகும். இந்த உடன்படிக்கையின் மூலம் இந்தியா இலங்கையின் தரைப்பகுதியை ஆக்கிரமித்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

சிங்கள இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணாலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்த உடன்படிக்கையின் மூலம் இந்தியா கைப்பற்றி இருப்பது எண்ணெய் தாங்கிகளை அல்ல, திருகோணமலையில் நிர்வாகத்தை கைப்பற்றியுள்ளது.

இந்தியாவின் உண்மையான தேவை எண்ணெய் தாங்கிகளை பெற்றுக்கொள்வது அல்ல. திருகோணமலை துறைமுகத்தின் நிர்வாகத்தை கைப்பற்றுவதற்காக அருகில் உண்ண நிலத்தை கைப்பற்றுவதே இந்தியாவின் தேவை.

இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ள 14 எண்ணெய் தாங்கிகள் திருகோணமலை துறைமுகத்திற்குள் நுழையும் இடத்தில் அமைந்துள்ளன.உடன்படிக்கையின் மூலம் இந்தியா அந்த நிலத்தில் உள்ள எண்ணெய் தாங்கிகளை கைப்பற்றிக்கொண்டுள்ளது.

இந்தியாவுக்கு தேவை என்றால், இந்தியாவில் பல எண்ணெய் தாங்கிகளை நிர்மாணித்து்ககொள்ள முடியும். வடக்கிற்கு அருகில் உள்ள தென்னிந்தியாவில் அதற்கு தேவையான அளவில் நிலங்கள் உள்ளன எனவும் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்.