பரந்தன்-முல்லைத்தீவு வீதியில் பாலத்துடன் மோதி 3 பிள்ளைகளில் தந்தை பரிதாப மரணம்!!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரந்தன் முல்லைத்தீவு பிரதான வீதியில் அமைந்துள்ள வெளிகண்டல் பாலத்துடன், மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் மோதி உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. தருமபுரத்திலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த மோர்டார் சைக்கிள் அதிக வேகத்துடன் பயணித்துள்ள நிலையில், வேகக் கட்டுப்பாட்டையிழந்து பாலத்துடன் மோதுண்டுள்ளது.

சம்பவத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில் விபத்து சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் கிளிநொச்சி கட்டைக்காடு பகுதியைச் சேர்ந்த பத்மநாதன் ரவிந்திரன் எனும் 3 பிள்ளைகளின் தந்தையே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Previous articleமனைவி கண்டித்ததால் மன விரக்தியடைந்த கணவன் எடுத்த விபரீத முடிவு : சோகத்தில் குடும்பத்தினர்!!
Next articleஇன்றைய ராசிபலன் 12/01/2021