கடலில் நீராடச்சென்ற நான்கு சிறுமிகளில் இருவர் மாயம் ….!

மாத்தறை வெலிகம பகுதியில் கடலில் நீராடச்சென்ற நான்கு சிறுமிகளில் இருவர் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

12 மற்றும் 15 வயது சிறுமிகளே காணாமல் போயுள்ளனர்.

இருவர் காப்பாற்றப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெலிகம காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

இவர்கள் 21 மற்றும் 14 வயதுகளை கொண்டவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம், இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தின் பின்னர் காணாமல் போயுள்ள சிறுமிகளை தேடும் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக வெலிகம காவல்துறையினர் எமது செய்திச்சேவைக்கு தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

Previous articleபுலமைப்பரிசில் பரீட்சை எழுத சென்று கண்ணீருடன் வீடு திரும்பிய மாணவர்கள்….!
Next articleகளுத்துறை பகுதியில் வெடிபொருட்களுடன் இளைஞர் ஒருவர் சிக்கினார்!