முல்லைத்தீவு பாண்டியன் குளம் பகுதியில் வெட்டுமிசினுடன் மோதி ஒருவர் மரணம்!!


முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பாண்டியன் குளம் பகுதியில், நேற்று 26.01.2022 இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியானதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மல்லாவி ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக

சிகிச்சைக்காக கிளிநொச்சி போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில் வீதியால் சென்று கொண்டிருந்த நெல்வெட்டும் இயந்திரத்திரனை ஏற்றிக்கொண்டு சென்ற உழவு இயந்திரத்தின் பின்னால் உந்துருளியில் பயணித்தவர்கள் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.இதில் உந்துருளியில் பயணம் செய்த 48 அகவையுடைய அநுராதபுரம் மாவட்டத்தினை சேர்ந்த ரவீந்திர நிக்கசீல என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்

28 அகவையுடைய செல்வபுரம் பாண்டியன் குளம் பகுதியை சேர்ந்த விமல் விக்னேஷ் என்பவர் படுகாயம் அடைந்த நிலையில் மல்லாவி ஆதாரமருத்துவமனை கொண்டுசெல்லப்பட்டு மேலதிக சிகிச்சைகாக்கா கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனை மாற்றப்பட்டுள்ளார்,உயிரிழந்தவரின் உடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதுடன் விபத்து குறித்து பாண்டியன் குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.உழவு இயந்திரத்தின் சாரதி பாண்டியன்குளம் பொலீசாரால் கைதுசெய்யப்பட்டு பொலீஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்,

உயிரிழந்தவரின் உடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதுடன் விபத்து குறித்து பாண்டியன் குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.உழவு இயந்திரத்தின் சாரதி பாண்டியன்குளம் பொலீசாரால் கைதுசெய்யப்பட்டு பொலீஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்,

Previous articleவவுனியா பல்கலைக்கழகம் மற்றும் கல்வியற்கல்லூரி மாணவர்கள் 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!
Next articleகடன் தொல்லையால் புதுமண தம்பதி உணவில் விஷம் வைத்து சாப்பிட்டு தற்கொலை…..!