கடன் தொல்லையால் புதுமண தம்பதி உணவில் விஷம் வைத்து சாப்பிட்டு தற்கொலை…..!


கடன் தொல்லையால் புதுமண தம்பதி உணவில் விஷம் வைத்து சாப்பிட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூர், உதயகிரி சாத்தஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 26). இவரின் மனைவி பவ்யா (வயது 22). இவர்கள் இருவரும் கடந்த வருடத்தில் திருமணம் நடைபெற்ற நிலையில், சந்தோஷ் வீட்டருகே மளிகை கடையை நடத்தி வந்துள்ளார்.

கொரோனா ஊரடங்கின் போது சந்தோஷுக்கு வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படவே, தனக்கு தெரிந்தவர்களிடம் அவர் பல இலட்சம் கடன் வாங்கி இருக்கிறார்.2எனினும் அவரது , வியாபாரம் முன்னேற்றத்தை தரவில்லை என்பதால், கடனை அடைக்க வழி தெரியாமல் அவதிப்பட்டுள்ளார்.

கடனை கொடுத்தவர்கள் பணத்தை திருப்ப கேட்டு வீட்டிற்கு வந்து தொல்லை கொடுக்க தொடங்கவே, தம்பதிகள் இருவரும் மிகுந்த மனவருத்தத்தில் இருந்த நிலையில், ஒருகட்டத்தில்   தற்கொலை செய்து உயிரை மாய்த்துவிடலாம் என்ற முடிவுக்கு தம்பதிகள் சென்றுள்ளனர்.

இதனையடுத்து நேற்று முன்தினம் இரவு நேரத்தில் உணவில் விஷம் கலந்த தம்பதி, அதனை சாப்பிட்டு தற்கொலை செய்துள்ளனர். நேற்று காலை நீண்ட நேரம் ஆகியும் வீட்டின் கதவுகள் திறக்கப்படாமல் இருந்ததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், தம்பதியின் வீட்டு கதவை தட்டி பார்த்தும் திறக்கவில்லை.

அதன் பின்னர், ஜன்னல் வழியாக எட்டி பார்க்கையில், தம்பதி உணவு சாப்பிட்ட நிலையில்  உயிரிழந்த நிலையில்   இருந்ததை பார்த்து  ஆதர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், வீட்டின் கதவை உடைத்து தம்பதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் பொலிஸ் விசாரணையில், தம்பதி கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொண்டது உறுதியான நிலையில், சம்பவம் தொடபில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.  

Previous articleமுல்லைத்தீவு பாண்டியன் குளம் பகுதியில் வெட்டுமிசினுடன் மோதி ஒருவர் மரணம்!!
Next articleமட்டக்களப்பில் வீட்டில் உள்ள நகைகாக மூதாட்டியை கொலை செய்த திருடன்….!